Friday, November 2, 2012

0 நினைவஞ்சலி

மீன்பாடும் தேன் நாட்டில்...
சென் நெல்லும் சேற்றில் மலர்ந்த தாமரையும்..
வண்ணமான வாவியும் வா என்று அழைக்கும் மதுர மரமும்...
கோ என்று காவல் புரியும் கோதை கண்ணகியும்..
வீற்றிருக்கும் தெளிவான களுவான்சியில்...
...
சங்கரலிங்கம் தனலெட்சுமி குலத்தில் பிறந்த...
தேவ மகனே நீ எங்கு சென்றாய் ???

கல்வி பல கற்று கலைகளில் நீ தேறி..
உயர் பதவி பெற்று உத்தமனாய் மிளிர வேண்டிய நீ...
உண்மையான மனிதன் நீ....
பால் வடியும் முகம் நீ பரந்த பண்பாளன்...
சேவைக்கு முன் நிப்பாய் நீ சீரிய மனிதனாய்...
குயில் ஓசை மறைந்தாலும் உன் குரல் ஓசை கேட்கிறதே..
கருணை உள்ளம் கொண்ட நீ ஓடி வர வேணும் அப்பா...

கேற்றில் நீ நிப்பாய் கேட்டால் புன் சிரிப்பு..
சிரிப்பின் அழகை கண்டு சிந்தை மகிழ்ந்திடுவோம்..
உறுதுணையாக நிமிர்ந்து நீ நிற்பாய்...
உன் தோற்றம் கண்டு உள்ளம் குளிந்திடுவோம்...
கனவில் வரமாட்டாய என்று கண் கலங்கி நிற்கின்றோம்..
கட்டாயம் வருவாய் என்று நானும் கடவுளை வேண்டி நிற்கிறேன்....

ஒரு பாவமும் அறியா பிஞ்சுகள் ஐவரின்...
உயிர் கொய்த காடையர்கள் கொடியவனிலும் கொடியவனே...

உடம்பெல்லாம் சோர்கிறதே சிந்தையில்...
சிந்தையில் நினைத்தால் தேனாக ஊறுகிறது..
உண்மையாக ஒரு நாள் ஓடி வந்திடு நீ........

வவுனியா விவசாய கல்லூரியில் 18 .11 .2006 அன்று உயிர் நீர்த்த மாணவர்களுக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு எல்லோருக்கும் பொதுவான இறைவனையும் பிரார்த்திக்கின்றோம்......
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks
 

Obituary notice Copyright © 2012 - |- web site created by New Eastern Media Network - |- Powered by Battileader.com